பொன்னம்பலம்-மும்தாஜ் நேருக்கு நேர் மோதல்: என்ன செய்ய போகிறார் கமல்?

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களுக்கும் மேல் ஆகியும் இதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்களின் திறமையின்மையால் இன்னும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் ஒன்றிப்போக முடியவில்லை. கமல் தோன்றும் சனி, ஞாயிறு மட்டுமே ஓரளவு நிகழ்ச்சி தேறி வருகின்றது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனிடம் பொன்னம்பலம் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். ஐஸ்வர்யா கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தபோது அவருடைய கால், தன்மீது பட்டதாகவும், முதலில் உன் காலை ஒழுங்காக வைத்தால்தான் தமிழ்நாட்டில் நீ நல்லபடியாக கால்வைக்க முடியும் என்று அட்வைஸ் கூறியதாகவும் கூறினார். இதனை கமல்ஹாசனும் ஆமோதித்தார்.

இந்த நிலையில் பொன்னம்பலம் கூறிய இந்த வார்த்தைக்காக மும்தாஜூம், ஐஸ்வர்யாவும் அவரிடம் வாதம் செய்ய பொன்னம்பலம் டென்ஷன் ஆகி கத்துவது போன்றும் அவருக்கு இணையாக மும்தாஜூம் வாதம் செய்வது போன்றும் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோ உள்ளது. இந்த பிரச்சனையில் கமல் என்ன செய்ய போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அனிருத்தின் இரண்டாவது படத்தில் நானி?

தமிழ் திரையுலகில் இளம் இசைப்புயல் அனிருத் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அவர் தெலுங்கு திரையுலகில் Agnyaathavaasi என்ற படத்திற்கு இசையமைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட ஆசை: உலகப்புகழ் பெற்ற பாடகி

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே பல உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார். அதேபோல் 'ஸ்லம்டாக் மில்லியனர்', 127 ஹவர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆர்யாவின் 'கஜினிகாந்த்': அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் 'கஜினிகாந்த்

ராகுல் காந்திக்கு தூது அனுப்பினாரா ரஜினிகாந்த்? பீட்டர் அல்போன்ஸ் சந்தேகம்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் என்பது தெரிந்ததே.

அரசியல்வாதிக்குரிய தகுதி என்னிடம் இல்லை: பாரதிராஜா

50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வந்திருந்தால் இந்நேரம் தான் முதல்வர் ஆகியிருப்பேன் என்றும், அரசியல்வாதிகளுக்குரிய முக்கிய தகுதியான சாணக்கியத்தனம், தந்திரங்கள் தன்னிடம் இல்லை