படுக்கையில் என்ன நடந்துச்சு? பொன்னம்பலத்திடம் வாக்குவாதம் செய்யும் ஐஸ்வர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது அனந்துவுக்கு ஒரு நபரை சிறையில் அடைக்க உரிமை கொடுக்கப்பட்டது. அவர் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க விரும்புவதாக தெரிவித்தார். பிக்பாஸ் வீட்டின் பெண்கள் குறித்து பொன்னம்பலம் தவறாக பேசியதால் இந்த தண்டனையை அவருக்கு தருவதாக அனந்து கூறினார்.
ஆனால், பொன்னம்பலம் கூறியது உண்மைதான் என்றும், குழந்தைகள் உள்பட அனைவரும் பார்க்கும் இந்த ஷோவில் பெண்கள் உள்பட அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியதாகவும், உண்மையை கூறிய பொன்னம்பலத்திற்கு சிறையா? என்றும் நெட்டிசன்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய புரமோவில் பொன்னம்பலம் சிறையில் இருக்கின்றார். அவரிடம் 'நான் ஷாரிக்கிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். வேறு ஒன்றும் நடக்கவில்லை என்று ஐஸ்வர்யா கூற, அதற்கு பொன்னம்பலம் 'வேறு படுக்கையில் இருந்தால் பரவாயில்லை, என் படுக்கையில் ஏன் இருந்தீர்கள் என்று கேட்க, அதற்கு மும்தாஜ், ஒரு படுக்கையில் இருவர் இருப்பது தவறில்லை ஆனால் அனைவரும் தூங்கிய பின்னர் பண்றது தப்புதான் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட யாஷிகா, 'ரெண்டு பேரும் சாதாரணமாகத்தான் பேசினார்கள். ஆனால் நீங்கள் எப்படி டெலிவிஷனில் என்ன சொன்னீர்கள் என்று நான் சொல்லட்டா? என்று கூற, அதற்கு ஆவேசமாக 'என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க' என்று ஐஸ்வர்யா கூற பிக்பாஸ் வீடே இன்று களேபரமாக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments