'மாநாடு' படத்தின் பொங்கல் ஸ்பெஷல்: எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் கெட்டப்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'மாநாடு’ படத்தின் பொங்கல் ஸ்பெஷல் புதிய ஸ்டில் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது

'மாநாடு’ இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு இந்த புதிய ஸ்டைலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போஸ்டரில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யாவின் மாஸ் லுக் உள்ளது என்பதும், முதல் முதலாக எஸ்ஜே சூர்யாவின் அட்டகாசமான கெட்டப் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பொங்கல் திருநாளில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள இந்த ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ,எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது