பொங்கல் ரிலீஸ் சக்சஸ் மீட்: 62 வயது நடிகருடன் மது அருந்திய இளம் நடிகை!

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் 62 வயது நடிகர் உடன் இணைந்து இளம் நடிகை ஒருவர் மது அருந்திய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படங்களில் ஒன்று ’வீரசிம்ம ரெட்டி’ என்பதும் என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் 125 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இதில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர். இந்த சக்சஸ் பார்ட்டியில் பாலகிருஷ்ணா உடன் அவருடன் நடித்த நடிகை ஹனிரோஸ் கலந்து கொண்ட நிலையில் ம் இருவரும் கைகோர்த்துக்கொண்டு ரொமான்டிக்காக மது குடிக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். சக்சஸ் பார்ட்டி என்பது படக்குழுவினர்களின் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் என்டிஆர் பாலகிருஷ்ணா 62 வயதான ஒரு மூத்த நடிகர் மட்டுமின்றி எம்எல்ஏவாக இருக்கிறார் என்றும் அதனால் அவர் ஒரு நடிகையுடன் நெருக்கமாக மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டது அநாகரீகம் அல்ல என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.