close
Choose your channels

'லத்தி' உள்பட பொங்கல் விருந்தாக வரும் 3 ஓடிடி படங்கள்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இரண்டு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு குவிந்து வருவதால் இரண்டு படங்களும் சம அளவில் வசூலையும் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் திரையரங்குகளை அடுத்து ஓடிடியில் பொங்கல் விருந்தாக 3 தமிழ் படங்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடித்த ’லத்தி’ சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், ஜீவா நடித்த ’வரலாறு முக்கியம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், அதேபோல் 'குருமூர்த்தி’ என்ற தமிழ் படம் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியிலும் வெளியே வர உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதை போல் மலையாள படமான ’முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் ’விடிக்கலுடே மாஸ்’ என்ற மலையாள திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

மேலும் Trail By Fire’ என்ற வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், ‘டாக் கன்’ என்ற ஆங்கிலப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது. மேலும் ஜீ5 ஓடிடியில் ‘ஹெட்புஷ்’ என்ற கன்னட திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment