பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

பொங்கல் உள்பட விழா காலங்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்திலும் திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வௌியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:  ''தமிழகத்தில் வரும் ஜனவரி 12, 17, 18 ஆகிய பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி அதாவது 5 காட்சிகளை தியேட்டர்களில் வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஏற்கனவே உள்ள அரசாணையின்படி காலை 9 மணிக்கு ஒரு காட்சி வெளியிடலாம். இதற்கான தகவலை கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் தெரிவித்துவிட்டு கூடுதல் காட்சிகளை தியேட்டர் அதிபர்கள் நடத்திக்கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தினத்தில் தமிழில் 'தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படங்கள் ஐந்து காட்சிகள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையா? தமிழக அமைச்சர் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்

தேடியது தங்கப்புதையல், கிடைத்தது வைரமலை: ஆந்திர அரரின் அதிர்ஷ்டம்

ஒரே ஒரு வைரம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் மதிக்கப்படும் நிலையில் ஆந்திர அரசுக்கு ஒரு வைரமலையே புதையலாக கிடைத்துள்ளது.

இஸ்ரோ தலைவராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக முதன்முதலாக தமிழரான கே.சிவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் ஜூலியின் முதல் படத்தின் ஷாக்கிங் டைட்டில்

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக மக்களிடம் புகழ் பெற்றவர் ஜூலி.

'நயன்தாரா' பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்: அனிருத் ஆச்சரியம்

நேற்று சென்னையில் நடந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அஞ்சனா கேட்ட கேள்விகளுக்கு அனிருத் விக்னேஷ் சிவனாகவும், விக்னேஷ் சிவன் அனிருத்தாகவும் மாறி பதிலளித்தனர்.