பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

  • IndiaGlitz, [Tuesday,January 14 2020]

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் தற்போது ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்டது

இதன்படி ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘கெளப்பு கெளப்பு’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரபல பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது