விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை: முன்னாள் மத்திய அமைச்சர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பேனர் விவகாரம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என பாஜக பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்று ‘பிகில்’ ஆடியோ விழாவின் போது பேனர் கலாச்சாரத்தால் உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து விஜய் பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு, பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘பேனர் விவகாரம் குறித்து இதற்கு முன் நடந்ததை எல்லாம் பேச வேண்டாம். ஒரு விலை மதிப்பில்லாத உயிரை பேனர் கலாச்சாரத்தால் இழந்துவிட்டோம். இனியாவது திருந்துவோம், திருந்துங்கள் என்று நான் சொல்லவில்லை. திருந்துவோம்.
பேனர் கலாச்சாரம் குறித்து ஆவேசமாக பேசும் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேனர்கள் எல்லாம் அனுமதி பெற்றுத்தான் வைத்தார்களா? என்பதை கூற முடியுமா? அல்லது பேனர் குறித்து பேசும் திரையுலகினர் இதற்கு முன் அனுமதி பெற்றுத்தான் பேனர் வைத்தார்களா? இந்த விஷயத்தில் நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout