தளபதியின் மெர்சலுக்கு தமிழிசையை அடுத்து மத்திய அமைச்சரும் எதிர்ப்பு
- IndiaGlitz, [Friday,October 20 2017]
தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி உள்பட ஒருசில வசனங்களுக்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தார்.
இந்த நிலையில் தமிழிசையை அடுத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தற்போது இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'உண்மைக்கு புறம்பான காட்சிகள் மற்றும் வசனங்களை மெர்சல் படத்தில் இருந்து நீக்க வேண்டும். நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என நினைக்கவில்லை. திரைப்படத்துறையை தவறாக பயன்படுத்தி ஒரு சிலர் அரசியல் செய்ய கூடாது. மெர்சலில் அரசியல் விமர்சனங்களை கூறியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல' என்று கூறினார்.
'மெர்சல்' படத்திற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அந்த படத்திற்கு கிடைத்த இலவச விளம்பரமாக கருதப்படுகிறது.