ரெய்டு வந்தாலும், ரெய்டு சென்றாலும் விஜய் தான் ஜெயிப்பாரு: பொன் பார்த்திபன் 

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது, விஜய், விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான பொன் பார்த்திபன் அவர்கள் பேசியபோது ’ரெய்டு போனாலும் சரி, ரெய்டு வந்தாலும் சரி விஜய் அண்ணன் தான் ஜெயிப்பார்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த விழாவின் நாயகன் அனிருத் பேசியபோது, ‘’மாஸ்டர்’ படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன. இவற்றில் எட்டு பாடல்கள் மட்டுமே இன்று வெளியாகிறது. இன்னும் ஒருசில நாட்களில் இரண்டு பாடல்கள் வெளியாகும் என்று கூறினார். எனவே இசை வெளியீடு விழா முடிந்த பின்னரும் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இசை விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.