டீ காக்கை விளாசிய பொல்லார்ட்… ரசிகர்களே அதிர்ந்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் இனவெறிக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை காட்டும் வண்ணம் போட்டிகளின்போது முழங்காலிட்டு சபதம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த நிகழ்வில் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் அமைதிக் காத்தார். இதனால் டீ காக்கை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், எந்தவொரு வீரரும் BlackLiveMatter பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் முதல் முறையாக நான் இதைக் கேள்விபடுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து இந்தப் பிரச்சாரத்திற்கு குரல் கொடுப்போம் இது உரிமைக்கான குரலென்று தெரிவித்துள்ளார். பொல்லார்டின் இந்தக்கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுக்கவே இனவெறிச் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன் உச்சபட்சமாக கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட் எனும் இளைஞர் போலீஸ் பிடியில் சிக்கி உயிரிழிந்தார். இந்தச் சம்பவத்திற்கு உலகம் முழுக்க கடும் எதிர்ப்பு காட்டப்பட்டது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை போட்டியில் கிரிக்கெட் வீரர்களும் இதேபோன்று இனவெறிக்கு எதிரான முழக்கங்களை போட்டிக்கு முன்பு எழுப்ப வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. இதை தென்ஆப்பிரிக்க அணியில் உள்ள சில வீரர்கள் புறக்கணித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரித்தாகவும் இனிமேல் நடக்கும் போட்டிகளில் சபதம் எடுத்துக்கொள்ளுமாறு கூறியது.
ஆனால் டீ காக் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வில்லை என்று கூறப்படும் நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை போட்டியில் இருந்து விலக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout