காணாமலே போய்விட்டார்… பொல்லார்ட்டை கலாய்த்து தள்ளும் மற்றொரு பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் கிரன் பொல்லார்ட்டை காணவில்லை என்று மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான டுவைன் பிராவோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாகப் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இதில் 2-0 என பின்தங்கியுள்ளது. இன்று 3 ஆவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கிரன் பொல்லார்ட்டை காணவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும் அவருடைய நண்பருமான டுவைன் பிராவோ பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே நெகிழச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இந்திய அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய கிரன் பொல்லார்ட், சாஹல் வீசிய பந்துவீச்சில் அவுட்டானார். இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவர் உடல்நிலை காரணமாக விலகினார். இன்றைய 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் பொல்லாட் விளையாடவில்லை. இவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் பதவியேற்றுள்ளார்.
இதையடுத்து பொல்லார்ட்டை கிண்டல் செய்துள்ள டுவைன் பிராவோ 34 வயதுடைய எனது நண்பர் காணாமல் போய்விட்டார். 1.85 மீ உயரமுள்ள அவரை கடைசியாக சாஹலின் பாக்கெட்டில் பார்க்க முடிந்தது எனக் கிண்டலடித்ததோடு ஒருவேளை இவரைப் பற்றி தெரிந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கோ அல்லது எனக்கோ இன்பாக்ஸ் செய்யுங்கள் எனத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்தப் பதிவிற்கு இந்திய வீரர்கள் உட்பட பலரும் விளையாட்டாக பதிலளித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான டுவைன் பிராவோ, பொல்லார்ட் இருவருமே நண்பர்கள் என்பதையும் தாண்டி ஐபிஎல் போட்டிகளிலும் முக்கிய வீரர்களாகக் கருதப்படுகின்றனர். டுவைன் பிராவே சிஎஸ்கே அணியுடன் கைக்கோர்த்து இருக்கும் நிலையில் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரராக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments