மனைவியிடம் வருத்தம் தெரிவித்த பொல்லார்டு
- IndiaGlitz, [Thursday,April 11 2019]
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்தார். பஞ்சாப் அணிக்கு இன்னொரு வெற்றி உறுதி என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மும்பை அணியின் கேப்டனாக நேற்று பொறுப்பேற்ற பொல்லார்ட், ருத்ரதாண்டவம் ஆடினார். 31 பந்துகளில் அவர் 83 ரன்கள் குவித்தார். இதில் பத்து சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இந்த அதிரடி ஆட்டத்தினால் மும்பை வெற்றி பெற்றதுடன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
நேற்றைய வெற்றி நாள் பொல்லார்டுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக இருந்தாலும் நேற்று அவருடைய வாழ்வில் இன்னொரு மறக்க முடியாத நாள் ஆகும். ஆம், நேற்று அவருடைய திருமண நாளும் கூட.
இந்த நிலையில் தனது திருமண நால் வாழ்த்துக்களை தனது மனைவி ஜென்னா அலிக்கு தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து கொண்டார். திருமண நாளன்று மனைவியுடன் இருக்க முடியாத நிலைக்கு வருந்துவதாக தெரிவித்த பொல்லார்டு, இந்த ஆண்டும் நமக்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று அவர் வாழ்த்து தெரிவித்தார். பொல்லார்டு தம்பதிகளுக்கு அவருடைய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on InstagramA post shared by Kieron Pollard (@kieron.pollard55) on Apr 10, 2019 at 2:24am PDT