பொதுமக்களிடம் சிக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்; அதிர்ச்சி வீடியோ
- IndiaGlitz, [Tuesday,March 12 2019]
பொள்ளாச்சியில் பல நூறு அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதோடு அவர்களை ஆபாச படம் எடுத்த குற்றவாளிகள் பிடிபட்டும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைத்தள பயனாளிகள் மத்தியில் எழுந்து வருகிறது. அரசியல் பின்புலத்தால் இந்த குற்றவாளிகள் தப்பிவிடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றவாளிகளில் இரண்டு பேர் பொதுமக்களிடம் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்த வீடியோவில் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததை இந்த குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையிலும் காவல்துறை இன்னும் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை ஒழுக்கம் இன்றி வளர்த்த இவர்களுடைய பெற்றோர்களும் குற்றவாளிகளே என சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வழக்கம்போல் இந்த குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி முயற்சிப்பதும், இந்த விவகாரத்தை பெரிதாக்கி அரசியல் லாபம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதும்தான் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் காவல்துறை பொதுமக்களின் காவலனாக இருந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இல்லையேல் இந்த வீடியோவில் ஒருவர் கூறியது போல் 'அதை வெட்டி ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுபோய் ஒட்ட வச்சிடலாம், அதுக்கு எல்லா செலவும் என் பொருப்பு' என்று மக்களே தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இத்தகைய நிலை ஏற்படாமல் செய்ய வேண்டிய பொறுப்பு தற்போது காவல்துறை மற்றும் நீதித்துறையிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
First video of one of the accused when Public got him first#PollachiSexualAbuse#ArrestPollachiRapists pic.twitter.com/U963KZibUV
— Doly (@ssddoly) March 11, 2019