பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் கைது… சூடு பிடிக்கும் விசாரணை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பண்ணை வீடுகளில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியைச் சார்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணையை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியும் உத்தரவிட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது இவர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கைது செய்யப்பட்டவர்களின் கைகளில் பல்லாயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் மேலும் பெண்களை மிரட்டி பணம் பறிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டதை எட்டி இருக்கும் நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அதில் பொள்ளாச்சி நகர மாணவ அணி செயலாளராக இருந்த அருளானந்தம் என்பவரும் ஒருவர். இதனால் மேலும் இந்த வழக்கில் திருப்பம் ஏற்படுமா அல்லது தேர்தல் நேரத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்துமா என்பது குறித்த பரபரப்பு கருத்துகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com