பொள்ளாச்சி விவகாரம்: 4 வீடியோக்கள் மட்டும் கிடைத்ததாக காவல்துறை தகவல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகம் முழுவதும் கொளுந்துவிட்டு எரியும் நிலையில் இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் யாரும் இல்லை என்றும், நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்றும் நான்கு வீடியோக்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது

ஃபேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்கள் மூலம் இளம்பெண்களுடன் நட்புடன் பழகி பின்னர் பண்ணை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வீடியோ எடுக்கும் கும்பல் கடந்த வாரம் பிடிபட்டது. திருநாவுக்கரசு, சபரீசன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்ட நிலையில் திருநாவுக்கரசு ஜாமீனில் வெளிவந்தது மட்டுமின்றி புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரையும் தாக்கியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதனையடுத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பாலியல் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஆவேசமாக எழுந்ததால் சுதாரித்து கொண்ட காவல்துறை மீண்டும் திருநாவுக்கரசை கைது செய்தது. இந்த கயவர்களால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கில் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் போலீஸ் உயரதிகாரி ஒருவர் 4 செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே உள்ளது என பேட்டியளித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது

டெல்லியில் ஒரே ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடே கொதித்தெழுந்தது. ஆனால் கோவையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வெறும் அறிக்கை மட்டும் வெளியிட்டுவிட்டு தேர்தலை பணிகளை கவனித்து வருவதும், காவல்துறையினர் சாதாரண பிரிவுகளில் மட்டும் வழக்குப்பதிவு செய்து வருவதையும் பார்க்கும்போது இத்தகையை கொடூர குற்றத்தை செய்தவர்கள் மிக எளிதாக தப்பிவிடுவார்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 

More News

பொதுமக்களிடம் சிக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்; அதிர்ச்சி வீடியோ

பொள்ளாச்சியில் பல நூறு அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதோடு அவர்களை ஆபாச படம் எடுத்த குற்றவாளிகள் பிடிபட்டும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை

நம்ம ஓடணுமா? ஒட விடணுமா? 'சிந்துபாத்' டீசர் விமர்சனம்

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத் திரைப்படத்தின் ஒரு நிமிட டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

துருவ் விக்ரமின் 'புதிய வர்மா'வில் 'கோலமாவு கோகிலா' நடிகர்

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' படத்தை வெளியிட போவதில்லை என தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்து அதற்கு பதிலாக புதிய வர்மாவாக 'ஆதித்ய வர்மா' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது

'தல' இருந்திருந்தால் ஜெயித்திருக்கலாம்: விக்னேஷ் சிவன்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்திருந்தும்

தறுதலையாகி தரங்கெட்ட ஆண்பிள்ளைகள்: பொள்ளாச்சி சம்பவம் குறித்து பிரபல இயக்குனர்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு இரண்டே நாளில் ஜாமீன் கொடுத்துள்ளது.