தேர்தல் அதிகாரி திடீர் மாயம்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

மேற்குவங்க மாநிலத்தில் வரும் 29ஆம் தேதி நான்கவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நாடியா என்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த அர்னாப் ராய் என்பவர் திடீரென மாயமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரானாகட் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அர்னாப் ராய், திடீரென கடந்த வியாழன் முதல் காணவில்லை. அவரது இரண்டு செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

அர்னாப் ராயின் மொபைல் போன்களை டிராக் செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் சிசிடிவி காட்சிகளில் மூலமும் அர்னாப் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பாளர் ஒருவர் தேர்தல் நேரத்தில் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.