தேர்தல் அதிகாரி திடீர் மாயம்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

மேற்குவங்க மாநிலத்தில் வரும் 29ஆம் தேதி நான்கவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நாடியா என்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த அர்னாப் ராய் என்பவர் திடீரென மாயமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரானாகட் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அர்னாப் ராய், திடீரென கடந்த வியாழன் முதல் காணவில்லை. அவரது இரண்டு செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

அர்னாப் ராயின் மொபைல் போன்களை டிராக் செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் சிசிடிவி காட்சிகளில் மூலமும் அர்னாப் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பாளர் ஒருவர் தேர்தல் நேரத்தில் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவாகும் கலையரசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 'பிர்சா முண்டா' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்.

அஞ்சலியின் 'லிசா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தியாவின் முதல் ரியல்D 3D தொழில்நுட்பத்தில் தயாரான அஞ்சலியின் லிசா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில்

அருள்நிதியின் 'K13' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1ல் இருந்து மே17க்கு மாற்றப்பட்டதால் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது

கமல்ஹாசன் - டி.ராஜேந்தர் சந்திப்பு! மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார்

பிரபல இயக்குனரும் நடிகருமான திரு டி ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் திருமணம் இம்மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து அவர் கடந்த சில நாட்களாக திரையுலக,

இருபிரிவினர்களிடையே மோதல்: பொன்பரப்பி கிராமத்தில் பயங்கர வன்முறை!

சிதம்பரம் மக்களவை தொகுதியில் உள்ள அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி என்ற கிராமத்தில் நேற்று இரண்டு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பயங்கர வன்முறை நடந்துள்ளது