அரசியல் மிகப்பெரிய ஆபத்தான விளையாட்டு: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Sunday,December 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடம் முடிய போகிறது. இருப்பினும் இன்னும் அவருடைய அரசியல் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவருக்கு பின் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்த சில நடிகர்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று ஒருசிலர் இன்னும் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். ஆனால் ரஜினியோ, அரசியல் கட்சி தொடங்கும் பணி 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது: அரசியல் மிகப்பெரிய, மிக ஆபத்தான விளையாட்டு. அதனால் அதை நான் கவனமுடன் விளையாட வேண்டும். நேரமும் மிக முக்கியம். அரசியல் மிகவும் சவாலான ஒன்று. எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, சினிமாவில் என் நடிப்பிற்கு நான் ஊதியம் வாங்குகிறேன். ஆனால் அரசியல் அப்படி கிடையாது. பூக்கள் நிறைந்த பாதைகள் அல்ல அரசியல்! அதில் நான் நானாக இருப்பேன். ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று கூறியுள்ளார்.

 

More News

உலக அளவில் டுவிட்டர் செல்வாக்கு பெற்ற ஒரே தமிழர்

2018ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது.

மீண்டும் லைகாவுடன் இணையும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

அரசியல்வாதிகள் தான் உண்மையில் தேசிய பேரிடர்கள்: கமல்ஹாசன்

கடந்த பிப்ரவரி மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின்னரும், கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், அதிமுக அமைச்சர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டே வந்தது

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்த இணையதளத்தை அசைக்க முடியவில்லை

என்னை நம்பாக கெட்டவங்க நிறைய பேரு : 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் விமர்சனம்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.