அரசியல் அவ்வளவு ஈசி அல்ல: கமல், ரஜினிக்கு விஜயசாந்தி அறிவுரை

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் பல கட்சிகள் களமிறங்கினாலும் புதியதாக களமிறங்கவுள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் கட்சிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த 20 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை விஜயசாந்தி, தமிழகத்தில் கமல், ரஜினி அரசியல் குறித்து கருத்து கூறியபோது, 'சினிமாவில் 'இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக அதிகமாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பாக இருக்க வேண்டும். அரசியல் அவ்வளவு ஈசி அல்ல. நான் தெலுங்கானாவில் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக 20 ஆண்டுகள் போராடி வருகிறேன். இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது.

அதேபோல் தமிழகத்தில் ரஜினி, கமல் யார் என சினிமாத்துறையினர் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். ஆனால் அதை அவர்கள் செய்தால் நிச்சயம் அரசியலில் வெற்றி பெற முடியும்,. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்' என்று விஜயசாந்தி கூறியுள்ளார்.

நடிகை விஜயசாந்தி, கமல்ஹாசனுடன் 'இந்திரன் சந்திரன்' படத்திலும் ரஜினியுடன் 'மன்னன்' படத்திலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் ஒப்புக்கொள்ளாத ஒரே விஷயம்: திலீப் சுப்பராயன்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விஸ்வாசம் திருவிழா ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்தை பொங்கல் அன்று வரவேற்க இப்பொழுது முதலே அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

கேரள முதல்வரிடம் கமல்ஹாசன் கேட்ட உதவி

உலக நாயகன் கமல்ஹாசனும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் நெருக்கமானவர்கள் என்பது தெரிந்ததே. கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், ஆரம்பித்த பின்னரும் பினரயி விஜயன் அவர்களை

பிரபுதேவாவின் 'சார்லி சாப்ளின் 2: சென்சார் தகவல்கள்

பிரபுதேவா, பிரபு நடித்த 'சார்லி சாப்ளின்' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் இந்த' படத்தின் இரண்டாம் பாகமான 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம்

25 நாளில் 25வது படம்: விஜய்சேதுபதிகாக சீதக்காதி படக்குழுவின் வீடியோ

'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கிய நடிகர் விஜய்சேதுபதி, வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'சீதக்காதி' திரைப்படத்துடன் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தனுஷின் 'ரெளடி பேபி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'மாரி 2' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்ற தகவலையும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது என்ற செய்தியையும் சற்றுமுன் பார்த்தோம்