இலங்கை அரசியலிலும் புயலை கிளப்பிய 'மெர்சல்
- IndiaGlitz, [Friday,October 27 2017]
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஒருசில வசனங்களை நீக்க கோரி தமிழக பாஜக தலைவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் மெர்சலுக்கு ஆதரவாக ராகுல்காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், தமிழகத்தில் ஆளும் அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்ததால் பாஜகவினர் அமைதியாகினர்.
இந்த நிலையில் தமிழக, தேசிய அரசியலில் மட்டுமின்றி 'மெர்சல் திரைப்படம் கடல் கடந்து இலங்கை அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மெர்சல்' படத்தை இலங்கையில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் பார்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்துள்ளார். இவர் ஒரு முன்னாள் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'மெர்சல்' படம் குறித்து அமைச்சர் ரஞ்சன் கூறியபோது, 'அரசு மருத்துவமனைகள் வளா்ச்சிப்பெற வேண்டுமெனில் அதிபா், பிரதமா், சுகாதாரத்துறை அமைச்சா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அதற்கு முன்னதாக அனைவரும் மெர்சல் படத்தினை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அமைச்சர் ரஞ்சனின் இந்த கருத்துக்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருவதால் இந்த படம் இலங்கையிலும் புயலை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.