'திரெளபதி' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்: பிரபல அரசியல்வாதி
- IndiaGlitz, [Thursday,February 27 2020]
ஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’திரெளபதி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று ஒரு பிரிவினர் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தடைகளை தாண்டி சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கிய ’திரெளபதி’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் இன்று தகுந்த பாதுகாப்புடன் ஒருசில அரசியல்வாதிகளுக்கு திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் ’சமூக சீர்திருத்த கருத்துக்களை எடுத்துக் கூறும் படமாக ’திரெளபதி’ அமைந்துள்ளது. வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்களுடைய முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த படம் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு பெண் குழந்தைகளும் அமைதியாக வாழவேண்டும் என்பதையே இந்த படம் உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்
அதேபோல் இந்த படம் குறித்து அர்ஜுன் சம்பத் அவர்கள் கூறியபோது ’திரெளபதி’ சாதி திரைப்படம் என்ற தோற்றத்தை யாரோ உருவாக்கி விட்டார்கள் என்றும் இது உண்மை காதலை போற்றும் படம் என்றும் சமூக விழிப்புணர்வை இத்திரைப்படம் ஏற்படுத்தும் என்றும் இந்தத் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்