தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் சித்ராவுக்கு நட்பா? ஹேம்நாத் தந்தையின் திடுக்கிடும் குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Sunday,December 20 2020]

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஹேம்நாத் தந்தை,  சித்ராவின் தற்கொலைக்கு அவரது முன்னாள் காதலர்கள் மேலும் அவருக்கு நெருக்கமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் மிரட்டல்கள் காரணமாக இருக்கலாம் என கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  
சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமென ஹேமந்த் தந்தை சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்

சித்ராவுக்கு ஏற்கனவே மூன்று காதலர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு சில காதல் திருமணம் வரை சென்று நின்றதாகவும் கூறியுள்ள அவர், சித்ராவுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது என்றும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவருடன் சித்ரா டேட்டிங் சென்றதாகவும் அப்போது எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்களை வைத்து அவர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் திருவான்மியூரில் உள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள வீடு மற்றும் ஆடி கார் வாங்கியதற்கு அவருக்கு தெரிந்த தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உதவி இருக்கலாம் என்றும் மீதமுள்ள தொகையை தான் சித்ரா மாதத் தவணையாக செலுத்தி வருவதாகவும் ஹேமந்த் தந்தை குறிப்பிட்டுள்ளார் 

மேலும் சித்ரா திருமணம் செய்து கொண்டால் ஒரு சில ஆதாரங்களை வெளியிட்டு திருமணத்தை நிறுத்துவதோடு அசிங்கப்படுத்த போவதாக அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிரட்டி இருக்கலாம் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். அதேபோல் சித்ரா  திருமணம் செய்துகொண்டால் அவருடைய பிரபலம் குறைந்துவிடும் என்று அவருக்கு நெருக்கமான நபர்கள் கூறியிருக்கலாம் அதன் காரணமாக சித்ராவுக்கு மிரட்டல் வந்திருக்கலாம் என்றும், அதனால் அவர் மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்றும் ஹேமந்த் தந்தை ரவிச்சந்திரன் கூறியுள்ளார் 

மேலும் சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகள் அழிக்கப்பட்டது ஒருசிலரை காப்பாற்றவே என்றும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு சில தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா தனியாக சென்று பதட்டத்துடன் பேசுவார் என்றும் பேசி முடித்தவுடன் அந்த எண்களை அழித்து விடுவார் என்று என்னிடம் கூறியிருப்பதாகவும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். எனவே சித்ராவின் தொலைபேசி அழைப்புகள் விவரங்களை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினால் சித்ராவின் தற்கொலைக்கு உண்மையான காரணம் வெளிப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்  எனவே சித்ராவின் தற்கொலைக்கு உண்மையாக காரணமானவர்களை கண்டுபிடித்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
 

More News

சித்ராவை தினமும் மிரட்டியது அரசியல்வாதியா? ஆங்கரா? சென்னை கமிஷனரிடம் மாமனார் புகார்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தாலும், அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புத்தாண்டு பிறக்கும் நொடியில் வெளியாகும் டீசர் இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

இளம்பெண்ணுடன் செல்பி எடுத்த அதிபருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்: காரணம் இதுதான்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த இன்னும் பல நாடுகளில் தடுப்பூசி அமலுக்கு வரவில்லை

ஆபாச வீடியோக்களை தூக்கி எறிந்த பெற்றோர் மீது வழக்கு போட்ட மகன்: நீதிமன்றத்தில் அதிர்ச்சி தீர்ப்பு!

மகன் சேகரித்து வைத்திருந்த ஏராளமான ஆபாச வீடியோக்களின் டிவிடிகளை பெற்றோர்கள் தூக்கி எறிந்ததை அடுத்து பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகன் குறித்த சம்பவம்

உலகம் அளவில் ஹிட்டான பட இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில்