இதுவரை உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசியல் வாதிகள்!!! தற்போதைய நிலைமை என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்று பரவல் விகிதம் ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகளில் அதிகமாக இருக்கிறது. காரணம் அந்நாட்டு மக்கள் மற்ற நாடுகளுக்கு அதிகபடியான பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களுக்குச் செல்வதால் பரவல் விகிதம் அதிகரித்து காணப்படுவதை ஒரு ஆய்வு சுட்டிக் காட்டியிருந்தது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா இன்று உலக நாடுகளையே பீடித்திருக்கிறது. இதன் பரவலைத் தடுக்க ஒவ்வொரு நாடுகளும் கடுமையாகப் போராடி வருகின்றன. ஆனாலும் நாகரிகச் சமூகத்தில் மக்களின் இடப்பெயர்வினைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக மாறியிருக்கிறது. இத்தகைய காரணிகளால் தற்போது கொரோனா ஏழை, பணக்காரம் என்று வித்தியாசம் பார்க்காமல் கிடைத்தவரை லாபம் என்று கண்ணில் பட்டவர்கள் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 30 லட்சத்தை நெருங்கியிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கையில் உலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களும் அடக்கம்.
அரசியல் ஆளுமைகள்
1.கார்மென் கால்வோ – ஸ்பெயினின் துணை பிரதமர் மார்ச் 25 அன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டது.
2.இளவரசர் சார்லஸ் – வேல்ஸ் இளவரசரும் பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் வாரிசமான சார்லஸ்க்கு கொரோனா இருப்பதாக மார்ச் 25 அன்று அறிவிப்பு வெளியானது. அவருக்கு 71 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அரச இல்லத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சார்லஸின் மனைவி கமிலாவுக்கும் அறிகுறி இருப்பதாகச் சந்தேகப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. தற்போது இருவரும் ஸ்காட்லாந்தில் உள்ள அரச தோட்டத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3.அப்பா கியாரி – நைஜீரிய ஜனாதிபதியின் ஆலோசகர் கியாரிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை அந்நாட்டு அரசாங்கம் மார்ச் 24 அன்று உறுதிப்படுத்தியது.
4.ராண்ட் பால் – அமெரிக்காவில் குடியரசுக் கட்டியைச் சார்ந்த செனட் உறுப்பினரான ராண்ட்பால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5.இளவரசர் ஆல்பர்ட் – மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட் II க்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் அவர் அரச மாளிகையில் இருந்து வெளியேறி தனது தனிப்பட்ட நிறுவனத்தில் இருந்துகொண்டு பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
6.மைக்கேல் பார்னியர் – ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக, ஐரோப்பிய ஆணையத்தின் பணிக்குழுத் தலைவராகப் பணியாற்றிவரும் மைக்கேல் பார்னியருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறது என செய்திகள் வெளியாகின.
7.பென்டோ அல்புகெர்கி – பிரேசிலின் சுரங்க மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் பென்டோ அல்புகெர்கிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
8. ஜெர்மி இசாச்சரோஃப் – ஜெர்மனிக்கான இஸ்ரேலின் தூதர் ஜெர்மி இசாச்சரோஃப் க்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
9. ஃபிரெட்ரிக் மெர்ஸ் – ஜெர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியை வழிநடத்தும் ஃபிரெட்ரிக் மெர்ஸ் க்கு கொரோனா பரிசோதனை மெற்கொள்ளப்பட்டது. அவர் தனக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப் படவில்லை என்றாலும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக மார்ச் 17 அன்று டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
10. கோசோ தாஷிமா- ஜப்பானின் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவராக உள்ள கோசோ தாஷிமாவுக்கு கொரோனா இருப்பதாக மார்ச் 17 அன்று செய்திகள் வெளிவந்துள்ளன.
11. நாடின் டோரிஸ் – இங்கிலாந்தின் சுகாதாரத் துறை அமைச்சரான நாடின் டோரிஸ்க்கு கொரோனா இருப்பதாக மார்ச் 10 அன்று செய்தி வெளியாகியது.
12. பீட்டர் டட்டன் – ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சரான பீட்டர் டட்டன் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
13. மசூமே எப்டேகர் – கொரோனா பாதிப்பில், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் முதல் இடத்தை வகிக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த அரசாங்க அதிகாரியான துணைத் தலைவர் மசூமே எப்டேகருக்கு நோய்த்தொற்று இருக்கிறது. அந்நாட்டின் துணை சுகாதாரத் துறை அமைச்சரான ஈராஜ் ஹரிர்ச்சிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
14. கிரேகோயர் ட்ரூடோ – கனடா அதிபரின் மனைவி கிரேகோயர் ஐக்கிய ஒன்றியத்திற்கு சென்று வந்தபின்பு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். அதிபருடன் இரண்டுவாரத் தனிமைக்குப் பின்னர் அவர் உடல் நலம் பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.
15. பெகோனா கோம்ஸ் – ஸ்பெயின் பிரதமரின் மனைவி பெகோனா கோம்ஸ் க்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து பிரதமருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
16. ஐரீன் மோன்டெரோ – ஸ்பெயின் அமைச்சரான ஐரீன் மோன்டெரோ வுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறது. மேலும், இவருடன் தொடர்புகொண்ட துணை பிரதமர் இக்லெசியாஸ் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.
17. ஃபிராங்க் ரைஸ்டர் – பிரெஞ்சு கலாச்சாரத் துறை அமைச்சர் ஃபிராங்க் ரைஸ்டர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.
18. பிரான்சிஸ் சுரேஸ் - அமெரிக்க மாகாணமான மியாமியின் மேயர் பிரான்சிஸ் சுரேஸ் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக மார்ச் 13 அன்று செய்திகள் வெளியாகின.
19. ஃபேபியோ வஜ்ஜார்டன் – பிரேசில் அதிபர் போல்சனாரோவின் செயலாளராக பணியாற்றிவரும் ஃபேபியோ வஜ்ஜார்டன் அமெரிக்கா சென்று திரும்பிய பின்பு கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.
20. மைக்கேல் வோஸ் – போலந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் வோஸ்க்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
21. புர்கினா பாசோ – மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவின் சுரங்கத் துறை அமைச்சர் ஓமரூ இடானி, கல்வித்துறை அமைச்சர் ஸ்டோனிஸ்லாஸ் ஓவரோ, உள்துறை அமைச்சர் சிமியோன் சவாடோகோ, உள்துறை அமைச்சர் ஆல்பா பாரி ஆகியோருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
22. போரிஸ் ஜான்சன்- பிரிட்டன் பிரமரான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டார். மார்ச் 27 இல் நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர், நோயின் வீரியத்தால் ஏப்ரல் 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 6 ஆம் தேதி தீவிரச் சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பூரணக்குணமடைந்து வீடு திரும்பியப் பின் தனது அலுவல் பணிகளையும் தொடங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
23. மத்தேயு ஹான்காக் – பிரிட்டனின் சுகாதாரத் துறை செயலாளரான மத்தேயு ஹான்காக் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு பணியாற்றி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
24. சேய் மக்கிண்டே – நைஜீரியாவின் ஓயோ மாகாண ஆளுநர் சேய் மக்கிண்டே வுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
25. இஸ்ரேலின் சுகாதாரத் துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மேன் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக ஏப்ரல் 1 ஆம் தேதி செய்திகள் வெளியாகின.
26. ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானிக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
உயிரிழப்பு
27. சோமாலியாவின் தன்னாட்சி பெற்ற மாநிலமான ஹிர்ஷபெல்லின் நீதித்துறை அமைச்சர் கலீஃப் முமின் டோஹோ ஏப்ரல் 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
28. கினியாவின் முன்னாள் அமைச்சரான Sekou Kourouma கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments