என்னால் தான் 'லியோ' பாடலுக்கு சப் டைட்டில் போடப்பட்டது: பெண் அரசியல்வாதி ட்விட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’நா ரெடி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் ஒரு சிலரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்த பாடலில் உள்ள சில வரிகள் மற்றும் இந்த பாடல் முழுவதும் விஜய் சிகரெட்டை வாயில் வைத்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவி ராஜேஸ்வரி பிரியா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடல் வெளியான தினத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அவர் அதில் கூறியிருந்ததாவது:
சிகரெட் (Tobacco Lobby) நிறுவனங்களின் விளம்பர தூதராக நடிகர் விஜய் உள்ளார். ரசிகர்களுக்கு நீங்கள் ரோல் மாடல் என்பதை மறந்து தொடர்ந்து பொறுப்பில்லாமல் இருப்பது சரியா? குழந்தைகளையும் பாதிக்கும் இந்த காட்சி.
திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்’ என்று பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல் ’நா ரெடி’ பாடலில் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது, புற்றுநோயை உருவாக்கும் என்ற சப்டைட்டில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதே அரசியல்வாதி ராஜேஸ்வரி தன்னால் தான் இந்த சப்டைட்டில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஆட்டம் கண்ட லியோ படக்குழு !!
கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது.
வெற்றி நமதே!!!
இன்னும் தொடரும்…
ஏற்கனவே தன்னால் தான் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும், தன்னால் 5000 மதுக்கடைகளையும் மூட வைக்க முடியும் என்று ஒரு ட்விட்டில் இவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகரெட் (Tobacco Lobby) நிறுவனங்களின் விளம்பர தூதராகவே நடிகர் விஜய் உள்ளார்.
— ராஜேஸ்வரி பிரியா (@Rajeswaripriya3) June 16, 2023
ரசிகர்களுக்கு நீங்கள் ரோல் மாடல் என்பதனை மறந்து தொடர்ந்து பொறுப்பில்லாமல் இருப்பது சரியா?
குழந்தைகளையும் பாதிக்கும் இந்த காட்சி.
திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.@actorvijay @polimernews pic.twitter.com/Dz3daVChBh
ஆட்டம் கண்ட லியோ படக்குழு !!
— ராஜேஸ்வரி பிரியா (@Rajeswaripriya3) June 27, 2023
கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு
புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது.
வெற்றி நமதே!!!
இன்னும் தொடரும்……@actorvijay @anirudhofficial @7screenstudio @SonyMusicSouth @Dir_Lokesh @polimernews pic.twitter.com/tcUdXyG9o7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com