வெற்றிடத்தை விஜய் தான் நிரப்ப வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட ஒருசிலர் கூறி வரும் நிலையில் தற்போது விஜய் ரசிகர்களும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் என்றும் இன்று திருச்சியில் நடந்த விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இன்று விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் விஜய் என்ன பேசுவார்? என்ற ஆவல் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திருச்சியில் விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.ராஜா, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், திரையுலகில் அவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.