ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கலே! இதுக்கு என்ன அர்த்தம்?

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்களுக்கு ரசிகர்களின் வித்தியாசமான கமெண்ட்டுக்களும் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக  'ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கலே' என்று நெல்லை பாஷையில் ரஜினி பேசிய இந்த வசனத்திற்கு அவருடைய ரசிகர்கள் அரசியல் சாயம் பூசியுள்ளனர். ஒரு சமூகவலைத்தள பயனாளி, 'வரும் சட்டமன்ற தேர்தல்ல 234 தொகுதியிலும் வேங்கை மகன் ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கலே' என்று அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளதாக எடிட் செய்து பதிவு செய்துள்ளார். இந்த பதிவு ரஜினி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே ரஜினி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்த அன்று 'வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.