'ஆதார்' திரைப்படத்திற்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் பாராட்டு!

நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஆதார்’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல அரசியல் கட்சி தலைவர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

'ஆதார்’ படத்தின் சிறப்பு காட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்காக சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த திருமாவளவன் கூறியதாவது: பழனி குமார் அவர்களின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகிவரும் 'ஆதார்’ படத்தை பார்த்தேன். இந்த திரைப்படம் வணிக நோக்கில் இல்லாமல் சமூகத்தில் நிலவும் சிக்கல்களை, எவ்வாறு அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கையாண்டார்கள் என்பதை புலனாய்வு நோக்கத்தில் சிறப்பாக கதை வசனம் திரைக்கதை அமைத்து உள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இந்த படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் எந்த திசை வழியில் இந்த திரைப்படம் போய்க்கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற சாதாரணமான சிக்கல்களை அதிகாரவர்க்கம் எப்படி அணுகுகிறது என்பதை இந்த திரைப்படம் பேசுகிறது.

அதிகாரவர்க்கத்தின் இருட்டான பகுதியை வெளிச்சத்தில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பழனிகுமார். இந்த படம் அதிகார வர்க்கத்தின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொள்வதற்கும் அதிகார வர்க்கத்தை புரிந்து கொள்வதற்கும் அரசியல் தலைவர்கள் அல்லது அரசியல் செல்வாக்குடன் இருப்பவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வதற்கும் சிறப்பாக அமைந்திருக்கிறது .

இயக்குனரின் இந்த முயற்சிக்கு கட்டாயமாக விருது கிடைக்கும் என்றும் குறிப்பாக இந்த படம் திரைக்கதை மற்றும் வசனங்களுக்கு விருது பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்திற்கு மிக அருமையான இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் எனது பாராட்டுக்கள். இத்தகைய படங்களை இளம் தலைமுறையினர் விரும்பி பார்க்க வேண்டும் என்று கூறி படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More News

களத்தில் இறங்கி செண்டை மேளம் வாசித்த 'பொன்னியின் செல்வன்' ஹீரோ: வைரல் வீடியோ

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவர் களத்தில் இறங்கி செண்டை மேளம் இசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திருப்பதி கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கான தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த

டிக்டாக் ஜிபி முத்துவுடன் அதிவேக பைக் பயணம்: பிரபல யூடியூபர் மீது வழக்குப்பதிவு!

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பின்னால் வைத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டியதாக பிரபல யூடியூபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

லோகேஷ் யுனிவர்ஸில் இணைய விரும்புகிறேன்: ஒரே நாளில் 'கைதி' 'விக்ரம்' பார்த்த பிரபலம் அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருக்கு 'லோகேஷ் சினிமா யுனிவர்ஸ்' என்ற LCU பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள்

'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்விக்கு யார் காரணம்? கெளதம் மேனன்

 தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே.