'டான்' படத்தை பாராட்டிய பிரபல அரசியல் கட்சி தலைவர்: படகுழுவினர் உற்சாகம்

  • IndiaGlitz, [Thursday,June 16 2022]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் வெற்றி விழாவில் லண்டனிலிருந்து லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் வருகை தந்து கலந்து கொண்டார் என்பதும் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே ’டான்’ படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் பாராட்டிய நிலையில் தற்போது இந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ’டான்’ படத்தை பாராட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் ’டான்’ படம் குறித்து பதிவு செய்திருப்பதாவது:

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You) என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என பாராட்டியுள்ளார். டாக்டர் ராமதாஸ் அவர்களின் பாராட்டை அடுத்து சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர்.