ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை தடை செய்ய வேண்டும்: அரசியல் கட்சி தலைவர் ஐகோர்ட்டில் மனு..!
- IndiaGlitz, [Saturday,August 19 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களால் மிகப்பெரிய ஆதரவுடன் திரையரங்குகளில் வசூல் மழை பெய்து வரும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூபாய் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'ஜெயிலர்' படத்தை தடை செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் ’யுஏ’ சான்றிதழ் வழங்கி இருப்பது தவறு என்றும் 'ஜெயிலர்' திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.