ரஜினி அரசியலுக்கு வருவது, அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல: தமிழக அமைச்சர்:
- IndiaGlitz, [Tuesday,December 26 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது அனேகமாக வரும் 31ஆம் தேதி தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பை பொதுமக்களை விட ஊடகங்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக ரஜினி தனது பேச்சில் கூறினார். ஆனால் ஊடகங்களை விட ஒருசில அரசியல்வாதிகள் தான் அதிகம் அவருடைய முடிவை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. இன்றைய அவரது பேச்சு குறித்து பிரபல அரசியல்வாதிகள் கூறியதை பார்ப்போம்
அமைச்சர் ஓ.எஸ். மணியன்: ரஜினி அரசியலுக்கு வருவது, அவர் உடல்நலத்திற்கும், குடும்பத்திற்கும் நல்லதல்ல
அமைச்சர் ஜெயக்குமார்: ரஜினி அரசியலுக்கு வரலாம், ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்
திருநாவுக்கரசர்: ரஜினி அரசியலுக்கு வந்தால் சந்தோஷம்; வரவில்லையென்றால் அது அவர் விருப்பம்
கராத்தே தியாகராஜன்: சிரஞ்சீவி போல உடனடியாக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார், முன்னேற்பாடுகளுடன் தான் ரஜினி வருவார்
நடிகர் மயில்சாமி: ரசிகர்கள் விரும்பும் இந்த தருணத்தில், ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும். ரஜினி தாமதம் ஏற்படுத்துவதில் தவறு இல்லை
நடிகர் ஜீவா: ரசிகர்களிடம் வீரம் உள்ளது, ரஜினியிடம் வியூகம் உள்ளது