போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பிரபலங்களின் ரியாக்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடியில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவதால் கலவரமாக வெடிக்கின்றது. மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டக்கூடாது. பிரச்சனைகளை தீர்க்கத்தான் நீதிமன்றம் உள்ளது என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் பிரபலங்களின் ரியாக்சனை தற்போது பார்ப்போம்
தமிழிசை செளந்திரராஜன்: பொதுமக்களின் போராட்டத்தில்..சமூகவிரோதிகள் ஊடுறுவியதால்தான் வரம்புமீறி உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஆக போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும் என்ற நிலையை சமூக அக்கறையோடு எடுத்துச் சொன்ன ரஜினிகாந்த் கருத்தை வரவேற்கிறேன். உண்மை நிலையை விமர்சனங்களையும் மீறி எடுத்துச்சொல்வதே சரி
தமிமுன் அன்சாரி: போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்துகிறார்; மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
கி.வீரமணி: வன்முறையில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என ரஜினி கூறுவதே சமூக விரோத குற்றச்சாட்டு
துரைமுருகன்: புதுப்பொண்ணு என்பதால் ரஜினி அப்படித்தான் பேசுவார்”
கே. பாலகிருஷ்ணன் (மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்): ரஜினியின் கருத்து ஸ்டெர்லைட் ஆலையின் குரல். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா? ரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும்
டி.கே.எஸ் இளங்கோவன்: முதல்வர், பொன். ராதாகிருஷ்ணன், ரஜினிக்கு ஒரே இடத்தில் இருந்து உத்தரவு வருகிறது. உயிரிழந்த 13 பேரில் யார் சமூகவிரோதி என்பதை பொன். ராதாகிருஷ்ணனும், ரஜினியும் விளக்க வேண்டும்
இயக்குநர் அமீர்: தூத்துக்குடி சென்ற பிறகு முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார் ரஜினிகாந்த்
முத்தரசன்: ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினியின் கருத்து உள்ளது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிக்கு நன்றி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout