ஸ்ரீதேவி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமா், ராகுல்காந்தி இரங்கல்
- IndiaGlitz, [Sunday,February 25 2018]
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ராகுல்காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவா்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது அசாத்திய நடிப்பால் 13 வயதில் கதாநாயகியாக கோலிவுட்டில் களம் புகுந்தார்.. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி. சினிமா துறையில் கால் பதித்து 50 ஆண்டுகளை பூா்த்தி செய்துள்ளார். இதற்காக அவருக்கு விழா எடுக்க குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு முன்பே அவர் எதிர்பாராத வகையில் நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்
ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மூன்றாம் பிறை போன்ற படங்கள் மூலம் நடிகா்களுக்கு முன்னுதாரணமாக திழ்ந்தவா் ஸ்ரீதேவி. அவரது மறைவு கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எ
பிரதமா் மோடி: நடிகை ஸ்ரீதேவியின் மறைவு ஆழ்ந்த சோகத்தை அளிக்கின்றது. இந்திய சினிமா துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தவா். அவரது நடிப்புகளில் பல நீங்காத நினைவை தருகின்றன. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல்காந்தி: ஸ்ரீதேவியின் மறைவு திடீா் அதிர்ச்சியளிக்கிறது. திறமையும், பன்முகத்தன்மையும் கொண்ட ஸ்ரீதேவியின் நடிப்பு மொழி மற்றும் தலைமுறைகளை தாண்டியது
துணைமுதல்வர் ஓபிஎஸ்: மிகச்சிறந்த நடிகையான ஸ்ரீதேவியின் மறைவு துரதிஷ்டவசமானது. ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கை தலைமுறைகள் கடந்தது அனைவரையும் ஈர்த்துள்ளது.