தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. வாழ்த்து சொன்ன அரசியல் பிரபலங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சில அரசியல்வாதிகளும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது குறித்து தற்போது பார்ப்போம்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு. விஜய் அவர்கள், பூரண நலமுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல! மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று விடுவார்கள். திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!
கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...
பாமர மக்கள் மீதான அதிகார தாக்குதல்!
எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன் குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்! மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2024
ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல!
— DJayakumar (@djayakumaroffcl) June 22, 2024
மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று விடுவார்கள்.
திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!
கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...
பாமர மக்கள் மீதான அதிகார… pic.twitter.com/2kaaByeIMP
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர்
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 22, 2024
திரு. @actorvijay அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு. விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com