தேர்தல் துளிகள்: 3 மே 2021
Send us your feedback to audioarticles@vaarta.com
தனிச்சின்னத்தில் அதுவும் பொதுத் தொகுதியில் வெற்றி… விசிக பெருமிதம்!
திமுக கட்சியுடன் பல ஆண்டுகாலமாக கூட்டணி வைத்து இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டியும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது. இந்நிலையில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும் மேலும் 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருந்தது.
இதையொட்டி விசிகவிற்கு 4 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் விசிகவிற்கு பானை சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் காட்டுமன்னார் கோவில் (தனி)- சிந்தனை செல்வன், செய்யூர் (தனி)- பனையூர் பாபு, நாகை (பொது)- முகமது ஷநவாஸ், திருப்போரூர் (பொது)- பலாஜி ஆகியோர் விசிக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர். இதில் வானூர் (தனி), அரக்கோணம் (தனி) ஆகிய தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் வெற்றியை நழுவவிட்டு உள்ளனர்.
20 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 4 பாஜக எம்எல்ஏ!
தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் தடம் பதிக்குமா என்பது குறித்து பலரும் பலத்த சந்தேகத்தை வெளிப்படுத்திய நிலையில் தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு பாஜக சார்பாக 4 எம்எல்ஏக்கள் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய இருக்கின்றனர். கடந்த 1996 ஆம் ஆண்டு ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டு 4 சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சார்பில் தமிழகத்தில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
தற்போது நாகர்கோவில் தொகுதியில் மூத்த தலைவர் திரு.எம்.ஆர்.காந்தி, கோவை தெற்கு தொகுதியில் பாஜக அகில பாரத மகளிரணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் முன்னாள் அமைச்சர் திரு.நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர். 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக தற்போது 4 இடங்களை மட்டுமே பிடித்து இருக்கிறது. இதில் ஸ்டார் வேட்பாளர்களான எல்.முருகன், நடிகை குஷ்பு, ஹெச்.ராஜா போன்றோர் தோல்வி அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
11 அதிமுக அமைச்சர்கள் தோல்வி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவில் அமைச்சர்களாக பதவி வகித்த 11 பேர் தற்போதைய தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 27 அமைச்சர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கினர். இதில் 16 அமைச்சர்கள் மீண்டும் வெற்றிப் பெற்று உள்ளனர். மேலும் 11 அமைச்சர்கள் எம்எல்ஏ பதவியை இழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிப்பெற்ற அமைச்சர்கள்- எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), ஓ.பன்னீர்செல்வம்- (போடி), சீனிவாசன்-(திண்டுக்கல்), செங்கோட்டையன்- (கோபிச்செட்டிப்பாளையம்), செல்லூர் ராஜு- (மதுரை மேற்கு தொகுதி), தங்கமணி- (குமாரபாளையம்), வேலுமணி- (தொண்டாமுத்தூர்), அன்பழகன்- (பாலக்கோடு), கருப்பணன்- (பவானி), காமராஜ்- (நன்னிலம்), ஓ.எஸ்.மணியன்- (வேதாரண்யம்), உடுமலை ராதாகிருஷ்ணன்- (உடுமலைப்பேட்டை), சி.விஜயபாஸ்கர்- (விராலிமலை), கடம்பூர் ராஜு- (கோவில்பட்டி), ஆர்.பி.உதயகுமார்- (திருமங்கலம்), சேவூர் ராமச்சந்திரன்- (ஆரணி).
தோல்வியடைந்த அமைச்சர்கள் – சி.வி.சண்முகம்- (விழுப்புரம்), கே.சி.வீரமணி- (ஜோலார்பேட்டை), ஜெயக்குமார்- (ராயபுரம்), எம்.சி.சம்பத்- (கடலூர்), நடராஜன்- (திருச்சி கிழக்கு), பெஞ்சமின்- (மதுரவாயல்), பாண்டியராஜன்- (ஆவடி), ராஜலட்சுமி- (சங்கரன்கோவில்), சரோஜா- (ராசிபுரம்), எம்.ஆர்.விஜயபாஸ்கர்- (கரூர்).
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments