4-ஆவது அலை வரக்கூடும்....! எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவின் நான்காம் அலை வரக்கூடும் என, போலந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆடம் நீட்ஜீல்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று ரேடியோ பிளஸுடன் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆடம் நீட்ஜீல்ஸ்கி கூறியிருப்பதாவது, "வரும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு பின் தற்போது இருக்கும் நிலையைவிட, கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கும். UK-வில் கோவிட் டெல்டா-வில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின், முந்தைய தாக்கத்தை விட உருமாறிய டெல்டாவில் மாறுபாடுகள் தெரிகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதுதான் இதை தடுக்க சரியான வழியாக இருக்கும். குறைந்தது செப்டம்பர் வரை தான் தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போலந்து அரசு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது, பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.
போலந்தில் மொத்த மக்கள் தொகை 30.68%-ல் , இதுவரை 11.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 27,512,324 தடுப்பூசி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு போலந்தில் இருபத்தி எட்டு லட்சத்து 79,811 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில், 75,005 நபர்கள் இந்தத்தொற்றால் பலியாகியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments