'தெறி' படத்தின் கடைசி நிமிட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Tuesday,April 12 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது 100% உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் படமான 'போலீஸ் ஒஹ்டு' திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி 'தெறி' படத்தின் தெலுங்கு பதிப்பு ஏப்ரல் 15ஆம் தேதி வெளிவரும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.


விஜய்க்கு தமிழகத்தை போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் அதிகளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இந்த படம் தெலுங்கு மாநிலங்களிலும் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அட்டகாசமாக இசையமைத்துள்ளார். இந்த படம் இவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.