காவல் துறையினரைக் குறி வைக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் காவல் துறையைச் சேர்ந்த 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலுக்குப் பின்பு நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஒருசில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் 1,000 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றுகாலை வெறும் 300 காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முழுமையான பாதிப்பு எண்ணிக்கை 1,000 என்று கூறப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் மக்கள் தொடர்பு அதிகாரி முதற்கொண்டு கூடுதலை ஆணையர் சின்மோஸ் பிஸ்வால் வரை காவல் துறையில் பல மூத்த காவலர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும் டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. இரவுநேர ஊரடங்கு மட்டுமே அமலில் இருக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்றைய பாதிப்பு 22,751 ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் சகோதரி: முதல்வர் வேட்பாளரா?

பிரபல நடிகரின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளதாகவும் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றுடன் ஒரு வருஷம் ஆச்சு: கணவர், குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய ஸ்ரேயா சரண்!

பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறுவதை அடுத்து கணவர் மற்றும் குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட கமல், ரஜினி பட நடிகை!

கமல், ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார். 

'குக் வித் கோமாளி 3': குக்குகள், கோமாளிகளாக கலந்து கொள்பவர்கள் இவர்களா?

'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகப்பெரிய பிரபலமானது என்பதும் இந்த சீசனில் கலந்துகொண்ட அஸ்வின், பவித்ரா, தர்ஷா, புகழ், சிவாங்கி உள்பட ஒருசிலர் திரையுலகிலும் தற்போது

அஜித்துக்கு திடீரென நன்றி கூறிய சிறுத்தை சிவா: காரணம் இதுதான்!

அஜித் நடித்த வீரம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா திடீரென சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்துக்கு நன்றி தெரிவித்து டுவிட்