காவல் துறையினரைக் குறி வைக்கும் கொரோனா பாதிப்பு!
- IndiaGlitz, [Monday,January 10 2022]
சென்னையில் காவல் துறையைச் சேர்ந்த 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவலர்களுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலுக்குப் பின்பு நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஒருசில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் 1,000 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றுகாலை வெறும் 300 காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முழுமையான பாதிப்பு எண்ணிக்கை 1,000 என்று கூறப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் மக்கள் தொடர்பு அதிகாரி முதற்கொண்டு கூடுதலை ஆணையர் சின்மோஸ் பிஸ்வால் வரை காவல் துறையில் பல மூத்த காவலர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும் டெல்லியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. இரவுநேர ஊரடங்கு மட்டுமே அமலில் இருக்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்றைய பாதிப்பு 22,751 ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.