மன்னிப்பு கேட்காவிட்டால் கைது செய்வோம்: தமிழ் நடிகருக்கு காவல்துறை எச்சரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தேசியக்கொடி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகழுக்கு இழுக்கு நேரும்படியும் ஒரு கருத்தை அவர் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை கைது செய்வோம்’ என்று தெரிவித்தார். இதனை அடுத்து செப்டம்பர் 2ஆம் தேதி வரை எஸ்வி சேகருக்கு மன்னிப்பு கேட்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் எஸ் வி சேகர் மன்னிப்பு கேட்டாரா? அல்லது கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கல்லூரி இறுதியாண்டு தேர்வு… சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விலக்கு கோரிய வழக்கு… உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!!!

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சொன்னதை செய்த சூர்யா! கோலிவுட் திரையுலகம் வாழ்த்து

நடிகர் சூர்யா தான் நடித்து தயாரித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொரோனா இருக்கா… வீட்டு தனிமையில் இருந்தால் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி அறிவிப்பு!!!

கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்கத்தை அனுபவித்து வந்தன.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை அடுத்து மீண்டும் இணையும் கார்த்தி-பார்த்திபன்: பரபரப்பு தகவல் 

கடந்த 2011 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்'திரைப்படம் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது என்பது தெரிந்ததே