சவால் வேண்டாம்: நடிகைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உலக டிரெண்டில் இருப்பது Kiki challenge என்று கூறப்படும் ஒரு சேலஞ்ச். ஐஸ்பக்கெட் சேலஞ்ச் போல் வைரலாகி வரும் இந்த சேலஞ்சில் ஓடும் காரில் இருந்து இறங்கி நடு ரோட்டில் டான்ஸ் ஆட வேண்டும். அதன் பின்னர் அதனை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்ய வேண்டும்
இந்த சேலஞ்ச் இந்தியாவில் குறிப்பாக நடிகர், நடிகைகள் மத்தியில் பெரிதாக பரவி வருகிறது. தமிழ் நடிகை ரெஜினாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த சேலஞ்சை ஏற்று காரில் இருந்து இறங்கி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் பிசியாக இருக்கும் சாலைகளில் இதுமாதிரியான சேலஞ்சை செய்வதால் ஒருசில இடங்களில் விபத்து ஏற்பட்டும் உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள போக்குவரத்து போலீசார் இந்த சவாலை ஏற்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நடிகர், நடிகைகள் இந்த சேலஞ்சுக்கு முக்கியத்துவம் தருவதால் அதிகமாக வைரலாகி வருவதாகவும், அவர்கள் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசார்களின் எச்சரிக்கைக்கு மதிப்பு கொடுத்து நட்சத்திரங்கள் இந்த சேலஞ்சை கைவிட வேண்டும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் வேண்டுகோள்ளாக உள்ளது.
#inmyfeelingschallenge had to be done!!!@champagnepapi you’ve got us South Indian girls dancin to your tunes.. ????
— ReginaCassandra (@ReginaCassandra) July 29, 2018
This is the craziness that goes on between shots... ????
Video and styling: @jaya_stylist
Music supervision:#priyankatumpala pic.twitter.com/dTA1enB9Nt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments