வாக்கு எண்ணிக்கையில் ஏமாற்ற முடியுமா? சிறப்பு நேர்காணல் வீடியோ!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
இந்தியாவில் வாக்குபதிவை நடத்துவதற்கு EVM இயந்திரம் பயன்படுத்தப் படுகிறது. இந்த இயந்திரத்தைக் கொண்டு பலமுறை தேர்தல் நடத்தப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்தும் வாக்குச் சாவடியில் நடக்கும் செயல்களைக் குறித்தும் மக்கள் மத்தியில் சில எதிர்மறையான கருத்துகளும் கூறப்படுகின்றன.
இந்த எதிர்மறை கருத்துகளைப் போக்குவதற்காக தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும் EVM இயந்திரத்தின் நம்பகத்தன்மை, வாக்கு சாவடியில் நடக்கும் செயல்முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகிறது. இருந்தாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வாக்காளர்கள் தோற்றுப் போகும்போதும் அல்லது வெற்றிபெறும் போதும் மக்கள் அந்த வாக்கு வித்தியாசத்தைக் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கி விடுகின்றனர்.
அதாவது அதிகாரத்தைப் பயன்படுத்தி EVM இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கையை கூட்ட முடியுமா? அல்லது வாக்கு பெட்டியை எண்ணாமல் விட்டுவிட முடியுமா? வாக்குச்சாவடியில் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அல்லது வாக்கு இயந்திரத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிட முடியுமா? என்பது போன்று, சாமானியர்கள் ஆயிரக்கணக்கான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற கேள்விகளுக்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வரதராஜன் அவர்கள் விளக்கம் அளித்து பிரத்யேக நேர்காணல் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தது குறித்தும் எதிர்மறைக் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. இத்தருணத்தில் EVM இயந்திரத்தைக் குறித்து வரதராஜன் அவர்கள் பேசியுள்ள இந்த விடியோ சமூக வலைத்தளத்தில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.