குதிரைக்கு தெரியுமா காவிரி பிரச்சனை? மெரினாவில் ஏமாந்த போலீசார்

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்த போதிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒருசிலர் முகநூல் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை மெரீனாவில் மக்களோடு மக்களாக ஊடுருவிய போராட்டக்காரர்கள் திடீரென கடல் அலை அருகில் தாங்கள் மறைவாக கொண்டு வந்திருந்த பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீசார் போராட்ட பகுதிக்கு செல்வதற்காக பீச்சில் வட்டமிடும் குதிரையை பயன்படுத்தி செல்ல முயன்றனர். ஆனால் பீச்சில் வட்டமடித்து மட்டுமே பழக்கப்படுத்தப்பட்ட அந்த குதிரை, ஒரு வட்டம் போட்டு மீண்டும் போலீசாரை கிளம்பிய இடத்திற்கே கொண்டு வந்து சேர்த்தது. குதிரைக்கு தெரியுமா காவீரி பிரச்சனை என்று நொந்து கொண்டபடியே போலீசார் பின்னர் நடந்தே போராட்ட பகுதிக்கு சென்றனர்.

More News

காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர்.

சென்னையில் சிஎஸ்கே போட்டிகான டிக்கெட்டுக்கள் எப்போது கிடைக்கும்

ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கவுள்ளதால்

கமல்ஹாசனை முந்தினார் சரத்குமார்

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர்.

ஐபிஎல் 2018: ப்ரித்தி ஜிந்தா கனவை நிறைவேற்றுவாரா அஸ்வின்?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு நெருங்கிவிட்டதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணியும் போட்டியை எதிர்நோக்க தயாராகி வருகின்றது.

மீண்டும் மெரினாவில் போராட்டமா?

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனாவில் நடந்த இளைஞர்களின் போராட்டம் உலகமே வியக்க்கும் வகையில் நடந்தது. அனேகமாக தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் என்று இதனை கூறலாம்.