யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியலை விரட்டி விரட்டி அடிக்கும் மும்தாஜ்

  • IndiaGlitz, [Tuesday,July 10 2018]

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தினமும் அல்லது வாரம் ஒருமுறை வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிக்பாஸ் என்னதான் யோசித்து அதனை வித்தியாசமான டாஸ்க் என்று அறிவித்தாலும் போட்டியாளர்கள் அதனை மொக்கையாக செய்வதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் திருடன் - போலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்தாஜ், செண்ட்ராயன், மகத் ஆகியோர் போலீசாகவும், யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியல் ஆகியோர் திருடர்களாகவும் நடிக்கின்றனர். யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியல் ஆகிய மூவரும் திட்டம் போட்டு திருட, அவர்களை மும்தாஜ், விரட்டி விரட்டி பிடிக்கின்றார். இந்த டாஸ்க்காவது பார்க்கும்படி இருக்குமா? என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் இந்த டாஸ்க்கின் இடையில் ஐஸ்வர்யாவின் கையில் உள்ள பாத்திரத்தை பொன்னம்பலம் தட்டிவிடுகிறார். எனவே அந்த பாத்திரம் உடைந்து அதில் உள்ள உணவும் வீணாகிவிட்டதாக ஐஸ்வர்யா கவலையடைகிறார். நாம் ஏற்கனவே சொன்னபடி, பொன்னம்பலத்தை பார்வையாளர்கள் மத்தியில் கெட்டவராக காண்பிக்க பிக்பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மூளையை கசக்கி யோசித்து வருகின்றனர்.

More News

மீண்டும் காதல் களத்தில் இறங்கும் டி.ராஜேந்தர்

ஒரு காலத்தில் டி.ராஜேந்தர் படம் என்றாலே படம் முழுக்க முழுக்க காதல் ரசம் சொட்ட சொட்ட இருக்கும்

'சர்கார்' விவகாரம்: விஜய்க்கு டி.ராஜேந்தர் ஆதரவு

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு எதிராக அரசியல் ஒருசில கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பொன்னம்பலத்தை டார்கெட் செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் தனிப்பட்ட ஒருவருக்கு புகழ் கூடுவது போல் தெரிந்தால் அவரை அனைவரும் சேர்ந்து கார்னர் செய்து வெளியேற்றிவிடுவார்கள்,

மெரினா என்றால் 'ஜல்லிக்கட்டு', கடைக்குட்டி சிங்கம் என்றால் 'ரேக்ளா;

மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நடைபெறும் முன்னர் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையை பலர் கேள்விப்பட்டிருந்தாலும் அந்த வீர விளையாட்டு குறித்து பலர் விரிவாக அறிந்திருக்கவில்லை.

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்; நீதிமன்றம் அதிரடி

நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ வேண்டுமென்றே தமிழ் மாணவர்களை பழிவாங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.