மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவருக்கு பாலியல் தொல்லை… சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு!

  • IndiaGlitz, [Monday,February 07 2022]

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி ஒருவர், காவல் உதவி ஆய்வாளாகப் பணியாற்றி வரும் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் மீது பாலியல் மற்றும் ஏமாற்றி பணம் பறித்துவிட்டதாகப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்துவரும் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி ஒருவர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் வங்கி மூலம் படூர் பகுதியில் வீடு வாங்கியிந்த நிலையில் அந்த வீட்டின்மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்திருக்கிறது. இதுதொடர்பான விஷயங்களில் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் உதவி செய்திருக்கிறார். மேலும் மிஸ் தமிழ்நாடு அழகியின் பெற்றோர் வெளிநாட்டில் வயதுமுதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆண்ட்ரூஸ் என்னை ஏமாற்றிவிட்டார் என்று அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் உங்கள் வீட்டில் சாத்தான் இருக்கிறது எனக் கூறிய ஆண்ட்ரூஸ் அதற்காக 40 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என பாதிரியார் மற்றும் அவருடைய தாயார், சகோதரி ஆகியோரை அழைத்து வந்தார். பின்னர் 40 நாட்கள் எனது வீட்டில் தங்கிய அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

மேலும் என்னுடைய வீடு, வங்கியில் இருந்த பணம் ஆகியவற்றையும் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டார். அதோடு திருமணம் குறித்து பேசியபோது 40 வயதுதான் ஆகிறது எனக் கூறினார். ஆனால் 56 வயதான ஆண்ட்ரூஸ் கால்டுவெல் காவல் நிலையத்தில் பணியாற்றவில்லை. அவர் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இதனால் என்னை ஏமாற்றிய ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற இளம்பெண் கடந்த 27 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.