சூதாட்டகாரர்களிடம் சூசகமாக காசு வாங்கிய போலீஸ் சஸ்பெண்ட்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருக்கும் மெட்டுவாவி பகுதியில், சூதாட்டம் நடந்து வருவதாக நெகமம் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறப்பு எஸ்ஐ ஏசு பாலன், அந்த இடத்திற்கு சென்று பணம் வைத்து சூதாடுவதை உறுதி செய்தார். இதன்பின் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது , வழக்கு போடாமல் இருக்க எஸ்ஐ பேரம் பேசியுள்ளார். அதாவது அவர்களிடமிருந்து ரூ. 7 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.
இதையடுத்து ஏசு பாலன் மீது, எஸ்பி செல்வநாகரத்தினத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவிட்டதன் பேரில் நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், லஞ்சம் குறித்து விசாரணை செய்ததில், சிறப்பு எஸ்ஐ பணம்பெற்றது உறுதியானது. இதன்பின் ஏசு பாலனை சஸ்பெண்ட் செய்ய எஸ்பி உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com