ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு.. என்ன காரணம்..!

  • IndiaGlitz, [Monday,May 15 2023]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட ஃபர்ஹானா திரைப்படத்தின் முக்கிய பிரபலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது.

இந்த படத்திற்கு ஒரு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த படம் எந்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் உருவாக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் அமீர் உட்பட பல திரை உலக பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இருப்பினும் இந்த படத்திற்கு ஒரு சில பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பதும் ஒரு சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More News

தல தோனியிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கிய மற்றொரு லெஜெண்ட்… வைரல் புகைப்படம்!

சென்னையில் நேற்று கொல்கத்தா அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையிலான லீக் போட்டி பரபரப்பாக நடைபெற்ற நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத தோல்வியைத் தழுவியது.

குடும்பத்துடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த ஜெயம் ரவி.. க்யூட் புகைப்படங்கள்..!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

'லால் சலாம்' படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினி செய்ய போவது இதுதான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மும்பையில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் மீண்டும் 'ஜெயிலர்' படத்தின் பணிகளுக்கு திரும்ப

40 வயசுல விஜயகாந்த் மாதிரி பொளந்துகிட்டு இருக்காரு.. தோனி குறித்த தமிழக கிரிக்கெட் வீரர்..!

 40 வயதில் விஜயகாந்த் போல தல தோனி பொளந்துகிட்டு இருக்கார் என்று தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

மாமியாரும் மிகச்சிறந்த அம்மாதான்.. நயன் அம்மாவிடம் ஆசி வாங்கிய விக்னேஷ் சிவன்..!

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் பலர் தங்கள் அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.