சென்னை லைகா நிறுவனத்திற்கு திடீர் பாதுகாப்பு ஏன்?

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

லைகா நிறுவனத்தின் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிநடத்த திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டு பின்னர் தமிழக அரசியல்வாதிகல் சிலரின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்துவிட்டதால் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் இலங்கை பயண ரத்து மற்றும் லைகா நிறுவனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒருசில அரசியல்வாதிகள் கருத்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்திற்கு நேற்று இரவு முதல் திடீரென காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஜினியின் இலங்கை பயணம் ரத்து குறித்து லைகா நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கம் அளித்திருந்தது.
அந்த விளக்க அறிக்கையில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அசம்பாதவித ஏதும் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.