விஜய் கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- IndiaGlitz, [Thursday,September 12 2024]
தளபதி விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்ட நிலையில் இந்த மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி மாநாட்டிற்கு அனுமதி அளிக்க தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்ட நிலையில் இந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்போது வந்த தகவலின்படி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு என்று தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 45 ஏக்கர் இடத்தில் வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளதாகவும், நெடுஞ்சாலையை ஆயிரக்கணக்கானோர் கடந்து சென்றால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் மாநாட்டு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையை கடந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் போலீசார் அனுமதி மறுத்துள்ளதாகவும் நெடுஞ்சாலையை ஆயிரக்கணக்கானோர் கடந்து சென்றால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் தான் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதை அடுத்து 23ஆம் தேதிக்குள் உரிய ஏற்பாடுகளை செய்வது கடினம் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.