தனியார் ரிசார்ட்டில் நிர்வாண நடனம், போதைப்பொருள்… தட்டித் தூக்கிய போலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியான பெங்களூர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட இளைஞர் பலரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அழகிகள் நிர்வாண நடனம் ஆடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
தமிழக எல்லைப் பகுதியான பெங்களூரு- ஆனெக்கல் எனும் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்றிரவு ரேவ் பார்டி என்ற பெயரில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்தப்படுத்தப் படுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள் உட்பட 37 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த ரேவ் பார்டியில் கலந்து கொண்ட அனைவரும் போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்தி இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்கள் பயன்படுத்திய போதைப்பொருள் மற்றும் சில மது பாட்டில்களையும் பார்டி நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ரேவ் பார்டியில் கலந்து கொண்ட அழகிகள் பலரும் நிர்வாணம் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தவிர இந்த பார்டியில் கலந்து கொண்ட 40 பேரும் highapp.com எனும் இணையத் தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக இந்த பார்டிக்கு டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். மேலும் இவர்கள் ஐடி கம்பெனிகளில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் என்பதோடு 40 பேர் கலந்து கொண்ட நிலையில் 37 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com